தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல தீப்பெட்டி தொழிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 50 முழுநேர தொழிற்சாலையும், 300 பகுதிநேர தீப்பெட்டி தொழிற்சாலையும், அதுபோக 2000 சிறுதொழில் தீப்பெட்டி தொழிற்சாலைகளும் இயங்கி வருகிறது.
கனமழை காரணமாக கேரளாவில் இருந்து வரும் தீப்பெட்டி செய்ய தேவையான மரத்தடிகள் வரத்து குறைந்து உள்ளன. மேலும், அவற்றை கடுமையான மழை காரணமாக அதனை காய வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வடமாநிலத்தில் இருந்து பெறப்பட்ட ஆர்டர்களுக்கும், உள்ளூர் ஆர்டர்களுக்கும் தீப்பெட்டி தயாரித்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், தீப்பெட்டி மரத்தடியின் விலை, மூலப்பொருட்களின் விலை ஏற்றம், ளார் வாடகை, மின்கட்டணம் உயர்வு போன்றவை இந்த தொழிலை வெகுவாக பாதித்துள்ளது. இதன் காரணமாக தீப்பெட்டி உற்பத்தி செய்யும் தொழிற் சாலையும், தீப்பெட்டி பிரிண்ட் செய்யும் தொழிலும் தற்போது முடங்கியுள்ளது. இதன் காரணமாக சுமார் 300 கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தி முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…