மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து.. 40,000 சேலை, வேட்டிகள் எரிந்து நாசம்.!
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பொங்கல் பரிசுக்காக வைத்திருந்த 40,000 சேலைகள், வேஷ்டிகள் எரிந்து நாசமானது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அலுவலக பொருட்கள் உட்பட பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்க வைத்திருந்த 40,000 சேலைகள் மற்றும் வேஷ்டிகள் தீ விபத்தில் எரிந்து நாசமானது.
தீ விபத்து குறித்து தகவலறிந்து 4 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் இணைந்து சுமார் 3 மணிநேரம் போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து தல்லாகுளம் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
???? மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்க வைத்திருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான வேட்டி சேலைகள் எரிந்து நாசமாகியுள்ளது. pic.twitter.com/MrN5hpfT2A
— Deepak Kumar Vasudevan (@lavanyadeepak) January 9, 2023