தேனி காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெறும்!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெறும் என உறுதியளித்திருக்கிறார்.
முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குரங்கணி கொழுக்கு மலைப்பகுதியில் சிக்கியவர்களை மீட்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெறும் என கூறியிருக்கிறார்.
தேனியை ஒட்டியுள்ள மாவட்டங்களிலிருந்து, தீயணைப்புத்துறையினர், வனத்துறையினர், வருவாய்த்துறையினர், காவல்துறையினர் தேவையான உபகரணங்களுடன் நிகழ்விடத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.
மீட்பு பணிகளை துரிதப்படுத்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்திடம் இருந்து, தமிழ்நாடு அரசு ஹெலிகாப்டர்களை கோரியுள்ளதாகவும் முதலமைச்சர் கூறியிருக்கிறார்.
இதனிடையே, மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த ஓ.பன்னீர்செல்வம், போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்தார்.
அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோரும் அவருடன் சென்றனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போடியில் முகாமிட்டு சிகிச்சை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.