வீட்டில் நகை, பணம் கிடைக்காத அதிருப்தியில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வீட்டிற்குள் புகுந்து திருட முயற்சித்த மர்மநபர்கள், தீவைத்து விட்டு தப்பிச் சென்றனர்.
தேவகோட்டை ராம்நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். இதனால் இவரது வீட்டில் கொள்ளை அடிக்க திட்டமிட்ட மர்மநபர்கள், நேற்றிரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் நகை, பணத்தை தேடியுள்ளனர்.
ஆனால் எதுவும் கிடைக்காத நிலையில் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் தீ வைத்து விட்டு தப்பினர். வீட்டிற்குள் இருந்து புகை வருவதை கண்ட மக்கள், தீயணைப்பு துறையினர் உதவியுடன் தீயை அணைத்தனர். இதுகுறித்து தேவகோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…