இன்று முதல் ரேஷனில் கடைகளில் மீண்டும் கைவிரல் ரேகை பதிவு நடைமுறை அமல்படுத்தப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இன்று முதல் ரேஷனில் கடைகளில் மீண்டும் கைவிரல் ரேகை பதிவு நடைமுறை அமல்படுத்தப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், புதிய ரேஷன் கார்டு அச்சிடும் பணி, புதிய கார்டுக்கு ஒப்புதல் தரும் சேவையும் இன்று முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பொருட்டு அரசால் ரூ.4000/- இரு தவணைகளில் ரூ.2000/- வீதம் மே 21 மற்றும் ஜீன் 21 மாதங்களில் வழங்க ஆணையிடப்பட்டது. மேலும் ஜீன்’ 21 மாதத்தில் நிவாரணத் தொகை ரூ.2000/-உடன் மளிகைப் பொருட்கள் வழங்கவும் 14 ஆணையிடப்பட்டது. இதனைப் பெற நியாய விலை கடைகளுக்கு குடும்ப அட்டைதாரர்கள் வரும் போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், தாமதமின்றி நிவாரணத் தொகை மற்றும் தொகுப்பு பையினையும் பெற்று செல்ல ஏதுவாக கைவிரல் ரேகை பதிப்பின் நடவடிக்கை நிறுத்தம் செய்யப்பட்டது.
புதிய மின்னணு குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்த மனுக்கள், அரசால் அறிவிக்கப்பட்ட கொரோனா நிவாரணத் தொகை மற்றும் 14 மளிகைப் பொருட்களின் தொகுப்பு வழங்கும் பணிமேற்கொள்ளப்பட்ட நிலையிலும், புதிய மனுக்களை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு கோர வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலும், கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக களப்பணியாளர்களால் விசாரணைக்கு செல்ல இயலாத சூழ்நிலை காரணமாகவும், தகுதியான மனுக்களை ஒப்புதல் அளிப்பதற்கான சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது நிவாரண உதவித் தொகை 98.59 சதவீதமும் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு 93.99 சதவீதம் வரை வழங்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் முழுவதுமாக விநியோகம் முடிக்கப்படும் நிலையில் உள்ளதால், 01.07.2021 முதல் புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவை, புதிய குடும்ப அட்டை அச்சிடும் பணியை மேற்கொள்வதற்கும் மற்றும் கைவிரல் ரேகைப் படிப்பினையும் மீள செயல்முறைப்படுத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…