பொதுமுடக்க விதிமீறல் இதுவரை ரூ.17.37 கோடி அபராதம் வசூல்.!

தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று தீவரமாக பரவி வருகிறது. இந்நிலையில் ஜூலை 31-ம் தேதி வரை 6-ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊரடங்கு உத்தரவு அமலில் நிலையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 8,23,488 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை, 7,50,620 வழக்குகளும் இதுவரை ரூ.17.37 கோடி அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.