முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்..! சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு ..!
முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,கொரோனா தொற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், துணிக்கடைகளில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கும் நடைமுறையை தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.