கோடநாடு விவகாரம் தொடர்புடைய உண்மையை கண்டறிய வேண்டும்-திருநாவுக்கரசர்
பிரியங்கா காந்தி புதிதாக அரசியலுக்கு வரவில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில், கோடநாடு விவகாரம் தொடர்புடைய உண்மையை கண்டறிய வேண்டும்.குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.அதேபோல் முதல்வர் பழனிச்சாமி பதவி விலக வேண்டும்.பிரியங்கா காந்தி குறித்து விமர்சனம் செய்வது சபாநாயகருக்கு முறையல்ல. அவர் விதிமுறைகளை மதிக்கவில்லை. பிரியங்கா காந்தி புதிதாக அரசியலுக்கு வரவில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.