சுமூக தீர்வு காணுங்க! இல்லையென்றால் தேமுதிக சார்பில் மாபெரும் போராட்டம் – விஜயகாந்த்

vijayakanth

தே.மு.தி.க சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என என்.எல்.சி நிர்வாகத்தை எச்சரிக்கிறேன் என விஜயகாந்த் அறிக்கை.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி நிறுவனத்தின் 2வது சுரங்க விரிவாக்க பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணியை என்எல்சி நிர்வாகம் தொடங்கியது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது 2வது நிலக்கரி சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக விளை நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக அறுவடைக்கு தயாராக இருக்கும் விளை நிலங்களை அழித்து, அதனை கையகப்படுத்தும் என்எல்சி நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறேன். விவசாயிகளுக்கு உறுதுணையாக இந்த அரசு இருக்கும் என மார்தட்டிக் கொள்ளும் முதல்வர் மு.க. ஸ்டாலின், நெற்பயிர்களை அழித்து அவசர அவசரமாக விரிவாக்கம் பணிகளை மேற்கொண்டு வரும் என்.எல்.சி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுவது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்.

சம்பந்தப்பட்ட விவசாயிகளுடன் என்எல்சி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டு. நெற்பயிர்களை அழித்து விளை நிலங்களை கையகப்படுத்தும் பணியை என்எல்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஒன்று திரட்டி தே.மு.தி.க சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என என்.எல்.சி நிர்வாகத்தை எச்சரிக்கிறேன் எனவும் கேப்டன் விஜயகாந்த் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்