நிதி நிறுவன மோசடி.. கவுன்சிலர் உட்பட மேலும் 9 பேர் கைது – பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி பேட்டி!
மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என ஐஜி ஆசியம்மாள் பேட்டி.
ஆருத்ரா கோல்டு டிரேடிங், ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக சென்னை கிண்டியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசியம்மாள், எஸ்.என்.எஸ் மோசடி தொடர்பாக 5 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.9.82 கோடி ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஹிஜாவு பண மோசடி வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆருத்ரா நிதி மோசடி வழக்கில் இதுவரை 61 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆருத்ரா மோசடி வழக்கில் 2 வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றார்.
ஆருத்ரா கோல்ட் ட்ரேடிங் நிறுவன மோசடி வழக்கில் கிளை பொறுப்பாளர்கள் உள்பட மேலும் 8 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவன மோசடி செய்த வழக்கில் திருச்சியில் 17-ஆவது வார்டு கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார். மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலி மூலம் பேசுவதால் தலைமறைவாக உள்ளவர்களை ட்ராக் செய்ய முடியவில்லை விளக்கமளித்துள்ளார். மேலும், முக்கிய வழக்குகளான ஆருத்ரா கோல்ட் டிரேடிங், ஹிஜாவு அசோசியேட்ஸ், LNS – IFS, AMRO KINGS, CVRS நிதி நிறுவனங்கள் மோசடிகள் மீதான புலன் விசாரணைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது எனவும் செய்தியாளர் சந்திப்பில் ஐ.ஜி ஆசியம்மாள் தெரிவித்தார்.