திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்றதற்காக நாக்கை அறுத்து நேர்த்திகடன் செய்த பரமக்குடி பெண்ணுக்கு திமுக சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது நேற்று நடைபெற்றது.இதில்,திமுக கூட்டணி 159 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.இதனால்,வருகின்ற மே மாதம் 7ஆம் தேதியன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார்.
இந்த நிலையில்,ராமநாதபுர மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள பொதுவகுடியில் வசிக்கும் வனிதா என்ற பெண்,தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வரானால் தனது நாக்கை அறுத்து கோவில் உண்டியலில் போடுவதாக வேண்டிக்கொண்டுள்ளார்.
அதன்படி,பரமக்குடி முத்தாலம்மன் கோவிலில் மே 3 ஆம் தேதியன்று காலை வனிதா தனது நாக்கினை அறுத்துக் கொண்டு கோவில் வாசலிலே நாக்கை வைத்து நேர்த்திகடனை செலுத்தியுள்ளார்.பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த வனிதாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில்,பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வனிதாவை,திமுக நகரச்செயலாளர் சேது கருணாநிதி,உதயநிதி ஸ்டாலின் மன்ற நிர்வாகிகள் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி மருத்துவ செலவுக்கு நிதியுதவி அளித்தனர்.இதனைத்தொடர்ந்து திமுக மாநில விவசாய அணி செயலாளர் மற்றும் முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ் விஜயனும் வனிதாவுக்கு ஆறுதல் கூறி ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…