திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்றதற்காக நாக்கை அறுத்த பெண்ணுக்கு திமுக சார்பில் நிதியுதவி..!

Default Image

திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்றதற்காக நாக்கை அறுத்து நேர்த்திகடன் செய்த பரமக்குடி பெண்ணுக்கு திமுக சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது நேற்று நடைபெற்றது.இதில்,திமுக கூட்டணி 159 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.இதனால்,வருகின்ற மே மாதம் 7ஆம் தேதியன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார்.

இந்த நிலையில்,ராமநாதபுர மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள பொதுவகுடியில் வசிக்கும் வனிதா என்ற பெண்,தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வரானால் தனது நாக்கை அறுத்து கோவில் உண்டியலில் போடுவதாக வேண்டிக்கொண்டுள்ளார்.

அதன்படி,பரமக்குடி முத்தாலம்மன் கோவிலில் மே 3 ஆம் தேதியன்று காலை வனிதா தனது நாக்கினை அறுத்துக் கொண்டு கோவில் வாசலிலே நாக்கை வைத்து நேர்த்திகடனை செலுத்தியுள்ளார்.பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த வனிதாவை மீட்டு சிகிச்சைக்காக  அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில்,பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வனிதாவை,திமுக நகரச்செயலாளர் சேது கருணாநிதி,உதயநிதி ஸ்டாலின் மன்ற நிர்வாகிகள் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி மருத்துவ செலவுக்கு நிதியுதவி அளித்தனர்.இதனைத்தொடர்ந்து திமுக மாநில விவசாய அணி செயலாளர் மற்றும் முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ் விஜயனும் வனிதாவுக்கு ஆறுதல் கூறி ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்