தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 11.30 வெளியிடுகிறார்.
தி.மு.க தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்ற பின் நடைப்பெற்ற முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், ஆளுநர் உரையின் போது நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை இன்று காலை 11.30 மணிக்கு தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடுகிறார்.
அதன்படி, பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெள்ளை அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடவுள்ளார். அதிமுகவின் கடந்த 10 வருட ஆட்சிக்காலத்தில் அரசின் திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகைகள் உட்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்த வெள்ளை அறிக்கையில் இடம் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக, கடந்த 2001 ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த சி.பொன்னையன், நிதி நிலை வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளை அறிக்கை என்றால் என்ன?
வெள்ளை அறிக்கை என்பது ஒரு அரசாங்கமோ அல்லது ஒரு அமைப்போ ஒரு பிரச்சனைக்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகும். வெள்ளை அறிக்கை மூலம் வெளியிட்ட அமைப்பின் தெளிவான குறிக்கோளை மக்கள் அறிந்துகொண்டு, விவாதிக்கவோ, ஆலோசிக்கவோ முடியும். வெள்ளை அறிக்கை, ஒரு பிரச்சனைக்குத் தீர்வாக அல்லது புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய வெளியிடப்படுகிறது.
அதன்படி, இன்று வெளியிடப்படவுள்ள தமிழகத்தின் நிதி நிலைக்கான வெள்ளை அறிக்கையில் வரவு – செலவு கணக்குகள், கடன் அளவு, நிதி இருப்பு உள்ளிட்ட அனைத்தும் இடம்பெறும்.
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…
சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…