முதல்வர் பயணத்தை கொச்சைபடுத்துகிறார் இபிஎஸ்.! நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கணடனம்.!
முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை இபிஎஸ் கொச்சைபடுத்துகிறார் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கணடனம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் 9 நாள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் சென்று உள்ளார். இன்று முதல் நாளில் சிங்கப்பூரில் மாலை தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார். இதன் மூலம் தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை ஈர்க்க உள்ளார்.
இந்த முதல்வரின் சுற்றுப்பயணத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்து இருந்தார். இன்ப சுற்றுலா சென்றுள்ளதாக விமர்சித்து இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டன அறிக்கையை வெளியிட்டு உள்ளார்.
அதில், அதிமுக சொத்துக்குவிப்பு வழக்குகளை மறைக்க, தமிழக முதல்வரின் 9 நாள் பயணத்தை இபிஎஸ் கொச்சைப்படுத்தி உள்ளார் என நீண்ட கண்டன அறிக்கையை தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து இருந்தார்.
அதிமுக ஆட்சியின் ஊழல்களை மறைக்க, முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கைத் திசைதிருப்ப தொழில் முதலீடுகளை உருவாக்கச் சென்றுள்ள மாண்புமிகு முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் பற்றி பழனிசாமி அவதூறு பரப்புவதா?
– நிதியமைச்சர் திரு @TThenarasu அவர்கள் கண்டனம்.
1/2 pic.twitter.com/f6dKgn6ahg
— DMK (@arivalayam) May 24, 2023