சாமானிய மக்களிடமிருந்து நிதியமைச்சர் மிக விலகி நிற்கிறார் – ப.சிதம்பரம்
உணவுப் பொருள்களின் பணவீக்கம் 7.62% ஆக உயர்ந்திருக்கிறது என ப.சிதம்பரம் ட்வீட்.
முன்னாள் மத்திய நித்தியமைச்சர் பா.சிதம்பரம் அவர்கள், தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை விமர்சித்து ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், பணவீக்கம் என்னுடைய தலையான கவலை அல்ல என்று சில நாட்களுக்கு முன் நிதி அமைச்சர் அறிவித்தார் அவர் சொன்ன முகூர்த்தமோ என்னவோ, சில்லறைப் பணவீக்கம் 7% என்று உயர்ந்திருக்கிறது!
உணவுப் பொருள்களின் பணவீக்கம் 7.62% ஆக உயர்ந்திருக்கிறது! இப்பொழுது கூட நிதி அமைச்சர் பணவீக்கத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றால் அவர் சாமானிய மக்களிடமிருந்து மிக விலகி நிற்கிறார் என்ற எண்ணம் உறுதிப்படுகிறது.’ என பதிவிட்டுள்ளார்.
உணவுப் பொருள்களின் பணவீக்கம் 7.62% ஆக உயர்ந்திருக்கிறது!
இப்பொழுது கூட நிதி அமைச்சர் பணவீக்கத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றால் அவர் சாமானிய மக்களிடமிருந்து மிக விலகி நிற்கிறார் என்ற எண்ணம் உறுதிப்படுகிறது
— P. Chidambaram (@PChidambaram_IN) September 13, 2022