ஆளுநர் மாளிகை மீது நிதியமைச்சர் குற்றசாட்டு!
ரூ.5 கோடியை மறைமுக கணக்கிற்கு எடுத்து சென்றுள்ளனர் என ஆளுநர் மாளிகை மீது நிதியமைச்சர் குற்றசாட்டு.
ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.5 கோடி நிதியில் ரூ.4 கோடியை அட்சய பாத்திரம் திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நிதியமைச்சர் அமைச்சர் கூறுகையில், ஆளுநர் மாளிகைக்கு கொடுக்கப்பட்ட ஒதுக்கீடு செலவுகள் குறித்து மாற்றங்கள் வந்ததாக ஆய்வு செய்யப்பட்டது. கடந்த 2018-19 வரை ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டது.
திடீரென்று ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டது. தனிப்பட்ட அதிகாரம் என்ற தலைப்பில் 50 லட்சத்தை ரூ.5 கோடியாக உயர்த்தியுள்ளனர். ரூ.5 கோடியில் ரூ.4 கோடியை அட்சய பாத்திர திட்டத்துக்கு கொடுத்துள்ளனர். எஞ்சியுள்ள ஒரு கோடி ரூபாயை ஆளுநர் மாளிகை கணக்குக்கு கண்ணனுக்கு தெரியாத கணக்கில் ஒரு கோடி மாற்றப்பட்டது என சட்டப்பேரவையில் அமைச்சர் குற்றசாட்டியுள்ளார்.
தனியார் தொண்டு நிறுவனத்தால் அட்சய பாத்திரம் திட்டம் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. எங்கள் கண்ணுக்கே தெரியாத வகையில் ரூ.1 கோடியை ஆளுநர் மாளிகை கணக்கில் வழங்கியுள்ளனர். ஆளுநர் மாளிகைக்கான ஒதுக்கீட்டில் சில மாற்றங்கள் தொடர்பாக தகவல் வந்ததால் ஆய்வு செய்தோம். சிஏஐ விதிகளை மீறி அட்சய பாத்திரம் திட்டத்திற்கு நிதி கையாளப்பட்டுள்ளது. இதனால் ரூ.5 கோடியை மறைமுக கணக்கிற்கு எடுத்து சென்றுள்ளனர் எனவும் குற்றச்சாட்டியுள்ளார்.