கல்லூரி மாணவர்களுக்கான இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு வரும் 21ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் அவர்களது செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களின் செமஸ்டர் தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்போது இறுதி ஆண்டு பயிலும் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகளை குறித்த தேர்வு அட்டவணையை சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அதில் இறுதி செமஸ்டர் தேர்வுகள் வரும் 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், தேர்வுக்கான முடிவுகள் அக்டோபர் 14 ஆம் தேதி மாலையில் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளனர். மேலும் தமிழக மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வருகை தந்து தேர்வை எழுத வேண்டும் என்றும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இறுதி செமஸ்டர் தேர்வை எழுதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து எழுதும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு எழுதுவது குறித்த கோரிக்கையை வைத்தால் அவர்கள் ஆன்லைனில் தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…