தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை தலைமைச் செயலகத்தில் ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டார். அதில்”தமிழ்நாட்டில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் 3.14 கோடி பெண்கள், 3.03 கோடி ஆண்கள் மற்றும் 8,294 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் 13 லட்சம்  பெயர் சேர்த்துள்ளனர். 6 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கி உள்ளோம். பெயர் நீக்கியதற்கு காரணம் முகவரி மாற்றுவதற்காகவும், இறந்தவர்கள், மற்றும் போலி ஆவணங்கள் உள்ளிட்டவைக்காக 6 லட்சம் வாக்காளரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

3.23 லட்சம் வாக்களர் திருத்தம் செய்துள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்கள் கொண்ட சட்டமன்ற தொகுதியாக சோழிங்கநல்லூர். இந்த தொகுதியில் 6.60 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.  அதைத்தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் தொகுதியில் 4.62 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.  

நாடாளுமன்றத் தேர்தல்… தேர்தல் பணிக்குழு அமைத்து அதிமுக அறிவிப்பு..!

தமிழ்நாட்டிலேயே குறைவான வாக்காளர்கள் கொண்ட சட்டமன்ற தொகுதியாக கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி உள்ளது.  அங்கு 1,72,140 வாக்காளர்கள் உள்ளனர். 2-வது குறைவாக உள்ள வாக்காளர்கள் தொகுதியாக சென்னை மாவட்டத்தில் உள்ள துறைமுக சட்டமன்ற தொகுதி உள்ளது” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்