இறுதி ஆண்டு தேர்வுகள் இரண்டு முறையில் நடைபெறும் – அமைச்சர் அன்பழகன்
இறுதி ஆண்டு தேர்வுகள் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என்று இரண்டு முறையில் நடத்தப்படும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கல்லூரி இறுதி பருவத் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவப்பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.ஆனால் இறுதி ஆண்டு தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என்று யுஜிசி தெரிவித்தது . மேலும் அனைத்து தேர்வுகளும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று தெரிவித்தது.
இதனிடையே உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறுகையில்,இறுதி ஆண்டு தேர்வுகள் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என்று இரண்டு முறையில் நடத்தப்படும்.எந்த முறையில்தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதை கல்லூரிகள்,பல்கலைக்கழகங்கள் முடிவு செய்து கொள்ளலாம்.வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் உள்ள மாணவர்களின் வசதிக்காக ஆன்லைன் தேர்வுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.