இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு…!

Default Image

இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், 4515 மனுக்கள் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லாத நபர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை இன்று மாலை 3 மணிக்குள் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் வழங்கப்படும் என்றும், சுயேச்சை வேட்பாளர்களுக்கு இன்று மாலை தனிச் சின்னம்  ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்