பிரபல கவிஞர் பிரான்சிஸ் கிருபா காலமானார்….!

Default Image

திரைப்பட பாடலாசிரியரும்,கவிஞருமான பிரான்சிஸ் கிருபா உடல்நலக்குறைவு காரணமாக நேற்று நள்ளிரவு காலமானார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்த பத்தினிப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் கவிஞர் பிரான்சிஸ் கிருபா தமிழ் இலக்கியத்தின் நவீன கவிதை எழுத்தாளர்களில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.

இவரின் மல்லிகைக் கிழமைகள், ஏழு வால்நட்சத்திரம், நிழலின்றி ஏதும் அற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல் என்ற கவிதைப் படைப்புகள் முக்கியத்துவம் பெற்றவை.

பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்த கிருபா,வெண்ணிலா கபடி குழு, அழகர்சாமியின் குதிரை, ராட்டினம் ,குரங்கு பொம்மை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி,திரையுலகில் பாடலாசிரியராகவும் பயணம் செய்திருக்கிறார். கன்னி என்கிற நாவலுக்கு 2007ஆம் ஆண்டு புதினம் என்ற விருது கிடைத்தது. 2008-ஆம் ஆண்டில் இவருக்கு நெய்தல் இலக்கிய அமைப்பின் சுந்தர ராமசாமி விருது கிடைத்தது. மீரா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

இந்நிலையில்,பிரான்சிஸ் கிருபா உடல்நலக்குறைவு காரணமாக நேற்று நள்ளிரவு காலமானார்.இதனையடுத்து,அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட இருக்கிறது.

கவிஞர் பிரான்சிஸ் கிருபாவின் மறைவுக்கு எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் ,பத்திரிகையாளர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்