மக்களவை தேர்தல் – இன்று தொடங்குகிறது வேட்புமனு தாக்கல்!
Lok Sabha Election : நாடு முழுவதும் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 102 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. அதன்படி, தமிழ்நாடு உட்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
Read More – ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: தமிழர்களுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அமைச்சர் பேச்சு… மு.க.ஸ்டாலின் கண்டனம்
இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. அதன்படி, வேட்பாளர்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 27ம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலினை மார்ச் 28ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
Read More – நாடாளுமன்றத் தேர்தல்: 5 தலைப்புகள் கீழ் 25 காங்கிரஸ் வாக்குறுதிகள்.!
வேட்புமனுக்களை திரும்ப பெற மார்ச் 30ம் தேதி கடைசி நாளாகும். மக்களவை தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Read More – ஃபோர்ப்ஸின் உலக பணக்காரர்கள் லிஸ்ட்! பெர்னார்ட் அர்னால்ட் முதல் முகேஷ் அம்பானி வரை..
இதில் குறிப்பாக வேட்புமனு தாக்கல் நடைபெறும் நாட்களில் பிற்பகல் 3 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.