வேட்புமனு தாக்கல் – இதுவரை எத்தனை பேர் தாக்கல் செய்துள்ளனர் தெரியுமா..?
இதுவரை 7 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 10 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவையடுத்து இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அந்த வகையில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு கட்சியினரும் தங்களது அறிவித்துள்ளனர். இந்த நிலையில், ஜனவரி 31-ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
இந்த நிலையில், இதுவரை 7 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 10 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுத்தாக்கல் செய்ய பிப்.7-ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.