போராளிகள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள் – திமுக எம்.பி கனிமொழி!
போராளிகள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள் என ஸ்டான் சுவாமிகள் மறைவிற்கு திமுக எம்.பி கனிமொழி இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார்.
திருச்சியை சேர்ந்த ஸ்டான் சுவாமி என்பவர் ஜார்கண்டில் பழங்குடியினர் நலனுக்காக குரல் கொடுத்தவர். மேலும், இவர் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்து பரப்புரையில் ஈடுபட்டதாக கூறி 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கைது செய்யப்பட்டார். அதன்பின் எல்கர் பரிஷத் வழக்கு தொடர்பாக சிறையில் இருந்த இவருக்கு உரிய மருத்துவ வசதி கிடைக்கவில்லை எனவும் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
அவருக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டு இருந்த நிலையில், இன்று காலை ஸ்டான் சுவாமி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், திமுக எம்பி கனிமொழி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் போராளிகள் விதைக்கப்படுகிறார், புதைக்கப்படுவதில்லை என குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
Stan Swami (84) who suffered from Parkinson’s was arrested by the BJP government as Anti-national. His health conditions were never considered. He slipped into coma and passed away.
போராளிகள் விதைக்கப்படுகிறார்கள் புதைக்கப்படுவதில்லை.#StanSwamy pic.twitter.com/a8Ko8tfks5
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) July 5, 2021