நடுவானில் பறந்த விமானத்தில் போராட்டம்!8 பேர் கைது
வானில் பறந்த விமானத்தில் கோஷங்களை எழுப்பியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று இண்டிகோ விமானம் ஒன்று சென்னையில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டு சென்றது.விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்த போது அதில் பயணம் செய்த சிலர் திடீரென்று எழுந்து நின்றனர்.
அவர்கள் எழுந்து நின்று கோஷங்களை எழுப்பினார்கள்.அதில் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வானில் பறந்த விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் விமான ஊழியர்கள் விமான நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் மதுரை விமான நிலையத்தில் இறங்கிய அவர்களை போலீசார் கைது செய்தனர்.விசாரணையில் அவர்கள் பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.மேலும் இது தொடர்பாக பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சிதலைவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.