கருப்பு பட்டை அணிந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இன்று நடத்தவிருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் வேலை பார்க்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு வேலை பளு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்து 3 மாதங்கள் கடந்துவிட்டது. இரவு பகல் பாராமல் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
இந்த நிலையில்7 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் சங்க கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.
செவிலியர் பிரிசில்லா குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்றும் , கொரோனா பாதிப்புள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் சிகிச்சை பெற தனி இடம் ஒதுக்கவேண்டும் வேண்டும் மருத்துவ கூட்டமைப்பு கோரிக்கை வைத்தனர்.மேலும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அனைவருக்கும் சிறப்பு ஊதியமாக ஒரு மாத சம்பளம் வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் தற்போது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்து தமிழகத்தில் இன்று நடத்தவிருந்த போராட்டத்தை வாபஸ் வாங்கியதாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…