ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலும் அது குறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
எனவே ஜனவரி 22-ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்றது.9 நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது.
அதேபோல் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.போராட்டத்தை கைவிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தெரிவித்தார்.
இன்று போராட்டம் குறித்து ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், போராட்டம் தொடரும்.பேச்சுவார்த்தை நடத்த முதலமைச்சர் தயங்குவது ஏன்? .போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களோடு முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.பேச்சுவார்த்தை நடத்தினால் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் . இன்று மாலை கூடவுள்ள உயர்மட்டக்குழு கூட்டத்தில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜன் தெரிவித்தார்.இந்நிலையில் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது.இதன் பின் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். பள்ளித்தேர்வுகள் தொடங்க இருப்பதை கருத்தில் கொண்டு கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஜாக்டோ-ஜியோ ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…
திருச்சி: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளிவந்துள்ள "விடுதலை 2" இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல…
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
கோவை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில்…
நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.…
சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு…