நெல்லை மாவட்டம் அறுமுகம்பட்டியைசேர்ந்த ஏசு இருதயராஜ் – புஷ்பலதா தம்பதிக்கு அண்மையில் இரட்டை குழந்தை பிறந்துள்ள்து. அதில் ஒன்று ஆண் குழந்தை, இன்னொன்று பெண் குழந்தை. இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது இந்த இரட்டை குழந்தைங்களை சேர்த்து தற்போது 5 குழந்தைகள் ஆகிவிட்டது. இதனால் இருதயராஜ் அந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையை விற்க முடிவு செய்துள்ளார்.
அதில் ஒரு பெண் குழந்தையை நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவரிடம் விற்றுள்ளார். அதற்காக ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் 35 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகையும் விலை பேசியுள்ளார்.
பிறகு இந்த விஷயம் போலீசாருக்கு தெரியவரவே, அவர்கள் அந்த பெண் குழந்தையை தங்கராஜிடம் இருந்து மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும், இருதயராஜிடம் இருந்து 42 ஆயிரம் ரொக்க பணமும், தங்க நகையும் கைப்பற்றியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக இருதயராஜ் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விஷயம் இருதயராஜ் மனைவி புஷ்பலதாவிற்கு தெரியாது என காவல்துறை சார்பில் கூறப்படுகிறது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…