சமீப காலமாக தமிழக முழுவதும் ஒவ்வொரு மாவட்டங்களுக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள், ஏற்கனவே அரசு அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மேலும், களஆய்வு கூட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை, போதைப்பொருள் விற்பனையை தடுப்பது உள்ளிட்டவைகள் குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி வருகிறார்.
அந்தவகையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டுள்ளார். நேற்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் களஆய்வு குறித்த ஆலோசனை கூட்டம் மேற்கொண்டார். இந்த 4 மாவட்டங்களில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் களஆய்வு கூட்டம் நடத்தினார்.
4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை..!
இரண்டாவது நாளாக களஆய்வு முதலமைச்சர் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் விவாதித்தார். இதன்பின் பேசிய முதல்வர், பள்ளி, கல்லுரி அருகே பெட்டிக்கடைகளில் போதைப்பொருள் விற்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையினருக்கு தெரியாமல் போதைப்பொருள் விற்பனை நடக்க வாய்ப்பில்லை என சிலர் கூறுகின்றனர்.
நான் நம்பவில்லை என்றாலும், உயரதிகாரிகள் இதனை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அப்படி நிகழ்ந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். மேலும், போதைப்பொருள் புழங்கக்கூடிய பகுதிகளில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். பல்வேறு குற்ற நிகழ்வுகளுக்கு மையப்புள்ளியாக போதைப்பொருள் இருந்து வருகிறது.
தங்கள் மாவட்டத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை முடக்குவது மாவட்ட எஸ்பிகளின் கடமை. காவல்துறையினர் மீது நல்லெண்ணம் ஏற்படுத்த வேண்டியது உங்கள் பொறுப்பு. முதல்வரின் முகவரியில் வரும் கோரிக்கைகளை களைய நானே களம் இறங்கி உள்ளேன். குற்றத்தடுப்பில் முக்கியமானது போதைத் தடுப்பு ஆகும். காவல்துறையினர் சாலை விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…