சென்னையில் ‘FICCI MEBC – South Connect 2025’! தொடங்கி வைக்கும் துணை முதல்வர் உதயநிதி!

திரைப்படம், தொலைக்காட்சி, ஓடிடி, உள்ளிட்ட பொழுதுபோக்கு துறையின் அனைத்து பிரிவுகளின் எதிர்காலத்தை ஆராய்வதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

udhayanidhi stalin FICCI South Connect 2025

சென்னை : இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (FICCI) ஏற்பாட்டில், ‘FICCI மீடியா & என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கான்க்ளேவ் (MEBC) – சவுத் கனெக்ட் 2025’ மாநாடு இன்று, பிப்ரவரி 21, 2025, சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் தொடங்குகிறது. (பிப் 21-22) இரண்டு நாள் நடைபெறும் இந்நிகழ்வை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கலந்து கொண்டு தொடங்கி வைக்கஉள்ளார். மேலும் நடிகர் கமல்ஹாசன் தலைமை வழிகாட்டியாக பங்கேற்கிறார்.

மாநாட்டின் முக்கிய அம்சம்

இந்த மாநாட்டில் தொலைக்காட்சி, ஓடிடி, கேமிங், அனிமேஷன், டிஜிட்டல் மீடியா உள்ளிட்ட அனைத்து பொழுதுபோக்கு துறைகளின் வளர்ச்சி, புதிய தொழில்நுட்பங்கள், முதலீட்டுத் திட்டங்கள் ஆகியவற்றை பற்றி விவாதிக்கபடவுள்ளது. ‘PlayNext’ எனும் தலைப்பில் கேமிங் மற்றும் மின் விளையாட்டு (e-sports) பற்றிய பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

  • “Regional to Global: Shaping India’s Creative Narratives” – இந்திய சினிமாவின் வளர்ச்சி மற்றும் அதன் சர்வதேச தாக்கம்.
  • “The Future of Indian Cinema” – OTT-வின் வளர்ச்சி, இந்திய திரைப்படங்களின் வணிக வாய்ப்புகள்.
  • “Transformation of Television & OTT” – தொலைக்காட்சி மற்றும் OTT துறைகளின் எதிர்காலம்.
  • “Innovations in Broadcasting & Music” – ஒளிபரப்பு மற்றும் இசைத்துறையில் புதுமைகள்.
  • “Gaming, Animation & VFX: The Next Big Leap” – கேமிங், அனிமேஷன், VFX துறைகளின் முன்னேற்றம்.
  • “Ease of Doing Business in M&E” – தொழில்துறை வர்த்தக சூழல் மற்றும் அரசாங்க ஆதரவு.

மேற்கண்ட தலைப்புகளில் முக்கியமானவர்கள் பேசவிருக்கிறார்கள்.

தொழில்நோக்கில் முக்கிய சந்திப்பு

ஃபிக்கி (FICCI) ஏற்பாட்டில் நடைபெறும் இந்த மாநாடு, தென்னிந்திய பொழுதுபோக்கு துறையின் வளர்ச்சியை மேலும் மேம்படுத்தும் வகையில், தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள், கொள்கை அமைப்பாளர்கள், உள்ளடக்க உருவாக்குநர்கள் எனப் பல முக்கிய பிரமுகர்களை ஒன்றிணைக்கும் மாநாடாக இது இருக்கிறது. இந்த இரண்டு நாள் மாநாட்டில் உழைப்பாளர்களுக்கான பட்டறைகள், கலந்துரையாடல்கள், தொழில் வளர்ச்சி சந்திப்புகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறுகின்றன.

மாநாட்டில் கலந்துகொள்ளும் முக்கிய நபர்கள்

இந்த மாநாட்டில் FICCI M&E Committee மற்றும் FICCI Tamil Nadu State Council ஆகியவற்றின் தலைவர்கள் உட்பட, முன்னணி நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள்.

  • கெவின் வாஸ் – தலைவர், FICCI M&E குழு & CEO, JioStar
  • சந்த்யா தேவநாதன் – இணைத் தலைவர், FICCI M&E குழு & VP, Country Head – India, Meta
  • அர்ஜுன் நோஹ்வார் – இணைத் தலைவர், FICCI M&E குழு & SVP & Country GM – India & South Asia, Warner Bros. Discovery
  • டாக்டர் G.S.K. வேலு – தலைவர், FICCI தமிழ்நாடு மாநிலக் கவுன்சில்
  • ரவி கொட்டரக்காரா, சஞ்சய் ஏ. வாத்வா, ராக்லைன் வெங்கடேஷ், அங்கூர் வைஷ், ஷ்வேதா பஜ்பாய், மஹேஷ்
  • ஷெட்டி, கிருஷ்ணன் குட்டி, ரவிகாந்த் சப்னாவிஸ், முன்ஜல் ஷ்ரோஃப், வைபவ் சாவன், ஜேக்ஸ் பீஜாய், பீஜாய்
  • அர்ப்புதராஜ், ஆஷிஷ் குல்கர்னி ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

பதிவு செய்ய வேண்டிய விவரங்கள்

பதிவுக் கட்டணம்:

பொது விருந்தினர்கள் – ரூ.4,000 + 18% GST = ரூ.4,720
FICCI Corporate உறுப்பினர்கள் – 25% தள்ளுபடி
FICCI Associate உறுப்பினர்கள் – 10% தள்ளுபடி
Film Chamber உறுப்பினர்கள் – 50% தள்ளுபடி

பதிவு செய்ய:

இந்திய பொழுதுபோக்கு மற்றும் மீடியா துறையின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்ற இருக்கும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பை தவறவிடாதீர்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தது என்றால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.frames.ficci.in/mebc/ இணையதளத்திற்கு சென்று டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்