ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது.இதனால் பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது.லேசான மழை சென்னை உள்ளிட்ட சில இடங்களில் அவ்வப்போது பெய்து வருகிறது.
இந்த நிலையில் வெப்பச்சலனம் மற்றும் பருவக் காற்றால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது .சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.