#Breaking:சற்று முன்…முதல்வருக்கு காய்ச்சல் – அரசு நிகழ்ச்சிகள் ரத்து!
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு அவர் கலந்துகொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதன்படி,நாளை ராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதல்வர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும்,நாளை மறுநாள் முதல்வர் இருந்த திருப்பத்தூர்,வேலூர் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன எனவும்,இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.