பண்டிகை காலம்: விமான கட்டணம் பல மடங்கு உயர்வு! மக்கள் அவதி…

Default Image

பண்டிகை காலம் விடுமுறையால் விமான கட்டணம் பல மடங்கு உயர்வு.

பண்டிகை காலம் விடுமுறையால் சென்னையில் இருந்து செல்லும் விமானங்களுக்கான பல மடங்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சபரிமலை சீசன், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பள்ளி விடுமுறையை ஒட்டி விமான நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அலை மோதுகிறது.

இந்த சமயத்தில் சென்னையில் இருந்து கொச்சிக்கு வழக்கமாக ரூ.3,500 கட்டணம், தற்போது ரூ.10,000 முதல் ரூ.19,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்துக்கு வழக்கமாக ரூ.5,150 விமான கட்டணம், தற்போது ரூ.12,000 முதல் ரூ.21,000 வரை உயர்ந்துள்ளது.

தூத்துக்குடிக்கு வழக்கமாக ரூ.5,300 டிக்கெட், தற்போது ரூ.13,000 முதல் ரூ.14,500 வரை உயர்த்துள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளன. மதுரைக்கு வழக்கமாக டிக்கெட் கட்டணம் ரூ.3,600 இருந்த நிலையில், தற்போது ரூ.12,000 முதல் ரூ.14,000 வரை உயர்ந்துள்ளது. கோவைக்கு சாதாரண நாட்களில் ரூ.3,500 டிக்கெட் கட்டணம், தற்போது ரூ.8,000 முதல் ரூ.13,500 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்