பண்டிகை விடுமுறை – நாளை வண்டலூர் பூங்கா திறப்பு…!
பண்டிகை விடுமுறை முன்னிட்டு பார்வையாளர்களுக்கு வண்டலூர் உயிரியல் பூங்கா திறப்பு.
ஆயுதபூஜை, விஜய தசமி போன்ற பண்டிகைகளை முன்னிட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து தரப்பு மக்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பல இடங்களுக்கு சென்று தங்களது பொழுதுபோக்கை களிப்பர்.
இந்த நிலையில், நாளை விடுமுறை தினத்தை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்காக திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 04.10.2022 செவ்வாய்க்கிழமை அன்று பண்டிகை விடுமுறை முன்னிட்டு பார்வையாளர்களுக்கு பூங்கா திறந்திருக்கும்.’ என அறிவிக்கப்பட்டுள்ளது.