ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தடையா.? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

சென்னை : தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் கூறி ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்க கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிந்தாலும், மற்ற மாநிலங்களில் ஜூன் 1 வரையில் தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தல் முடிவு வெளியாகவுள்ள ஜூன் 4 வரையில் தேர்தல் நடைமுறை விதிமுறைகள் அமலில் இருக்கும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது. இருந்தும் வாகன சோதனைகள் மட்டும் மாநில எல்லை பகுதிகளில் மட்டும் தொடரும் என்றும் கூறப்பட்டது.
இப்படியான சூழலில் தேர்தல் நடத்தை விதிமுறையை கரணம் கூறி, ஊர் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் தடை விதிக்கப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் நடைபெற்றுள்ளது. இதனால், சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை சம்பத்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அளித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் தாலுகாவில் பழைய மரக்காணம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, வருகிற மே 18ஆம் தேதி கோவில் சார்பாக ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அப்பகுதி வளத்தி காவல் நிலையத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் அனுமதி கோரப்பட்டது.
ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதாக கரணம் கூறி மாரியம்மன் கோயில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு வளத்தி காவல் நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கேசவன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் நடைமுறை அமலில் இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி, தேர்தல் முடிந்த பிறகும் தேர்தல் நடத்தை விதிகளை காரணம் கூறி ஆடல் பாடல் போன்ற நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினார்.
மேலும், ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்கனவே நடப்பில் உள்ள சட்டத்துக்கு உட்பட்டு கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்த உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று, விழுப்புரம் மாவட்டம் வளத்தி காவல் நிலையத்தினருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு உத்தரவிட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025