ஃபெஞ்சல் புயல்: நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் நிதியுதவி!

முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ளார்.

Siva Kartikeyan Relief Fund

சென்னை: ஃபெஞ்சல் புயல், கனமழை வெள்ளம் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்புகளுக்குள்ளாகி இருக்கிறது. அதேபோல், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான ஆடு, மாடுகளும் பலியாகியுள்ளன.

இந்த நிலையில், வெள்ளத்தால் கடும் பாதிப்புகளுக்கு உள்ளான மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவித்தோடு, நிவாரணம் பொருட்களையும் வழங்கி வருகிறது. அந்த வகையில், ஃபெஞ்சல் புயல் நிவாரணப் பணிகளுக்கு ரூ.10 லட்சத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கினார். ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு திரையுலகிலிருந்து முதல் ஆளாக நடிகர் சிவகார்த்திகேயன் நிதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “ஃபெஞ்சல் புயல் – கனமழையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்குத் துணை நிற்கும் விதமாக, ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பட நடிகர் சகோதரர் சிவகார்த்திகேயன், ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்