சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல ஆய்வாளர் பாலச்சந்திரன் ஃபெஞ்சல் புயல் எப்போது கரையை கடக்கும், கரையை கடக்கும்போது எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்பது பற்றிய தகவலை தெரிவித்து இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசியதாவது ” இந்த புயலானது நவம்பர் 30-ம் தேதி பிற்பகலில் மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் சூறாவளி புயலாக, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே கரையை கடக்கும்.
புயல் கரையை கடக்கும் போது வட தமிழக கடலோர மாவட்டங்களில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். அதே சமயம், ஒருசில இடங்களில் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இந்த புயல் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும்” எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தொடர்ந்து பேசிய பாலச்சந்திரன்புயல் கரையை கடக்கும்போது எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்பது பற்றியும் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது ” சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் புயல் கரையை கடக்கும்போது கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தரைக்காற்று எச்சரிக்கை : வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 70 முதல் 30 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும், நாகபட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் தென்மண்டல ஆய்வாளர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை : வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி கடற்கரையில் கரையை கடக்கவுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,…
சென்னை : வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி கடற்கரையில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்…
சென்னை : பெஞ்சல் (FENGAL) புயல் 30.11.2024 அன்று கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம்,…
சென்னை : வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயலின் நகரும் வேகம் 13 கிலோ மீட்டரில் இருந்து 15 ஆக…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயலின் நகரும் வேகம் 13 கிலோ மீட்டரில் இருந்து 15 ஆக அதிகரித்துள்ளதாக…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் நவம்பர் 30-ம் தேதி பிற்பகலில் மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் மணிக்கு 90…