பெண் எஸ்.ஐ-க்கு கத்தி குத்து..! தொலைபேசியில் நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
திருநெல்வேலியில் தாக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசா அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.
நெல்லை சுத்தமல்லி அருகே பழவூரில் கோயில் கோடை விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசாவிடம், முத்துசாமி மகன் ஆறுமுகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆறுமுகம் கடந்த ஒரு மாதத்திற்கு முன் குடிபோதையில் வாகனம் ஒட்டியதாக அபராதம் விதித்தது குறித்து ஆறுமுகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், கையில் வைத்திருந்த கத்தியை வைத்து குத்தியுள்ளார். இதில் படுகாயமைடந்த பெண் காவலரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்புக்கு நின்ற பெண் காவலருக்கு நிகழ்ந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலியில் தாக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசா அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன்.
தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சகோதரி மார்க்ரெட் தெரசாவிற்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்க அறிவுறுத்தியுள்ளேன்.
— M.K.Stalin (@mkstalin) April 23, 2022