சங்கரன்கோவில் கோமதியாபுரம் சேர்ந்த திருவுடையான் மகள் அன்பரசி வயது (23).பிஎஸ்சி பட்டதாரியான இவர் அழகியபாண்டியபுரத்தில் உள்ள தபால் நிலையத்தில் போஸ்டவுமனாக வேலை பார்த்து வந்தார்.
இவர் நேற்று தனது வழக்கமான பணிக்கு அழகிய பாண்டியபுரத்தில் இருந்து மானூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் வியாழக்கிழமை வந்துகொண்டிருந்தார். சிற்றாற்று பாலம் அடுத்து கட்டாரங்குளம் விலக்கு அருகே சென்றபொழுது பின்னாடி வந்த லாரி மோதி சம்பவ இடத்திலே உயிரிழிந்தார்.
இது குறித்து தகவலறிந்து வந்த மானூர் காவல்துறையினர் அன்பரசி உடலைகைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான சௌந்தராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர் தந்தை திருவுடையான் இசையோடு இடது சிந்தனையையும் மக்கள் மனதில் விதைத்து மக்கள் பாடகர் என்று அழைக்கப்பட்டவர்.இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு சாலை விபத்தில் இறந்தார்.தற்பொழுது இவர் மகளும் சாலை விபத்தில் இறந்தது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியதுள்ளது.
.
இம்பால் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே…
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில்…
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…