முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கண்ணீர் விட்டு அழுத பெண் எம்.எல்.ஏ…!
கடந்த முறை வாய்ப்பு வழங்கப்பட்ட மன்னச்சநல்லூர் தொகுதி பெண் எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகனுக்கு, இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்டதால், முதல்வரிடம் கண்ணீர் மல்க முறையீடு.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்.6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து, தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில், தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், கடந்த வாரம் அதிமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது முதல், தமிழகத்தில் பல இடங்களில் அதிமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, கடந்த முறை வாய்ப்பு வழங்கப்பட்ட மன்னச்சநல்லூர் தொகுதி பெண் எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகனுக்கு, இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருச்சி சென்றுக் கொண்டிருந்த போது, இடையில் அவர் தொண்டர்களை சந்தித்தார். அப்போது பெண் எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகன் கண்ணீர் மல்க முறையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.