கொடைக்கானலில் பெண் தீக்குளிப்பு.! காப்பாற்ற முயற்சிக்காமல் வீடியோ எடுத்தவர் கைது.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கொடைக்கானலில் பெண் தீக்குளித்ததை வீடியோ எடுத்ததால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொடைக்கானலின் கீழ்மலை கேசிபட்டி பகுதியை சேர்ந்தவர் மாலதி(32). இவருக்கு சதீஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்று தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் மாலதியின் கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், தற்போது அந்த பெண்ணை திருமணம் செய்துள்ளதாகவும் கேள்விப்பட்டதை தொடர்ந்து மாலதி கணவரின் வீட்டில் சென்று தன்னை விட்டு விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்வது குறித்து நீதி கேட்டுள்ளார்.
ஆனால் கணவர் மற்றும் அவரது வீட்டார் மாலதியை தரக்குறைவாக பேசி விரட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த மாலதி கணவரின் வீட்டின் முன்பே தீக்குளித்துள்ளார். அவரை காப்பாற்ற முயற்சிக்காமல் அங்கிருந்தவர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளனர். அதிலும் ஒருவர் பெண் தீக்குளிப்பதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். இதனையடுத்து பெண்ணை காப்பாற்றாமல் வீடியோ எடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் மாலதியின் கணவரான சதீஷின் அண்ணன் சரவணக்குமார் என்று கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
விரைவில் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்.! எதிர்பார்த்ததை விட வேகமெடுக்கும் நாசா!
February 12, 2025![Sunita Williams](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sunita-Williams.webp)
விட்டதை பிடித்த இலங்கை… ஆஸி.,யை வீழ்த்தி ஒரு நாள் தொடரில் முதல் வெற்றி.!
February 12, 2025![Sri Lanka vs Australia 1st ODI](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sri-Lanka-vs-Australia-1st-ODI.webp)