புதுக்கோட்டையில் தேங்கிய மழைநீரில் சிக்கி, மூச்சு திணறி உயிரிழந்த பெண் மருத்துவர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொம்மாடிமலையிலிருந்து துடையூர் செல்லக்கூடிய சாலையில் சுரங்கப்பாதை போன்று ரயில்வே பாலம் அமைக்கப்பட்டுள்ளது இந்நிலையில் அங்கு பெய்த கனமழையால் அந்த தரைதளத்தில் தண்ணீர் தேங்கி இருந்துள்ளது. இப்னு 50 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கி இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அந்த பாலம் வழியாக அரசு மருத்துவமனையில் பணியாற்றும் சத்யா என்ற பெண் மருத்துவர் அவரது மாமியாருடன் சென்றுள்ளார். அந்த தண்ணீரினுள் கார் மூழ்கியதையடுத்து, கார் செயல்படவில்லை. அவரது மாமியார் வெளியேறி நீச்சலடித்து தண்ணீரை விட்டு வெளியே வந்த நிலையில், சத்யாவால் வெளியே வர இயலவில்லை.
நீரில் இருந்து வெளியேற முடியாமல் தவித்த அரசு மருத்துவர் சத்யா மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் விளைவாக அந்த கிராமத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், காவல்துறையினர் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், போராட்டத்தை கைவிட்ட மக்கள் கலைந்து சென்றனர்.
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…