திமுக குறித்து அவதூறு பரப்பிய பெண் பாஜக ஆதரவாளர் உமா கார்த்திக் கைது.
கோவை: கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் விஜய் உள்ளிட்டோர் குறித்து தொடர்ந்து ஆபாசமாகவும், அவதூறாகவும் ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வந்த பாஜக ஆதரவாளர் உமா கார்க்கி என்ற பெண் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது, சமூக வலைதள செயல்பாடுகளை பாராட்டி, சமீபத்தில் அண்ணாமலை விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.
அண்மையில், தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ் மற்றும் கல்விக்கான ஊக்கத்தொகையை வழங்கினார் நடிகர் விஜய்.
விழாவில் பேசிய விஜய் “அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களை பற்றி மாணவ, மாணவிகள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்” என முக்கிய அறிவுரையை கூறியுள்ளார். இதற்கு, பெரியார் பற்றி படிக்க சொன்ன கருத்துக்கு தனது சமூக வலைதள பக்கத்தில், விஜய் மற்றும் அவரது மகளையும் அவதூறாக பேசி கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார்.
இதனை தொடர்ந்து, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர், அந்த புகாரின் அடிப்படையிலும், திமுக குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பியதன் பேரிலும், அந்த பெண் பாஜக ஆதரவாளர் உமா கார்க்கி கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…