தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை கிடைக்கும் என 10 லட்சம் பணம் பறித்த பெண் காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனு விசாரணையில் ஐகோர்ட் கிளை கருத்து.
சிவகங்கை மாவட்டம் இடையன்குடியை சேர்ந்த பேக் டெய்லரிடம் 10 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில், மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்டுள்ள பெண் காவல் ஆய்வாளர் வசந்தி தனக்கு ஜாமின் கோரி மனு ஒன்றை அளித்துள்ளார்.
இந்த வழக்கின் தற்போதைய நிலையை அறிய நீதிமன்றம் விரும்புவதாகவும், வசந்தி கைது செய்யப்பட்ட பின் நடைபெற்ற வழக்கின் விசாரணை குறித்து போலீஸாரிடம் அரசு வழக்கறிஞர் தகவல் பெற்று நாளை நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் நேற்று நீதிபதி புகழேந்தி அடங்கிய அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், டெய்லரிடம் 10 லட்சத்தை பறித்து கைதாகியுள்ள பெண் காவல் ஆய்வாளர் வசந்தியின் ஜாமின் மனு மீதான விசாரணையின் போது கருத்து தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், யார் தவறு செய்தாலும் தண்டனை கிடைக்கும் வகையில் நடவடிக்கை இருக்க வேண்டும் எனவும், வசந்தியின் செயலால் அவர் சார்ந்த காவல்துறைக்கு களங்கம் ஏற்படுகிறது எனவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…
சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில்…
இலங்கை : இலங்கையின் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 7 மாணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4 வரை…
சென்னை : சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வடகிழக்கு பருவமழையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக…