சென்னை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சிக்கான கட்டணம் உயர்வு!

சென்னையில் 4ஆவது மலர் கண்காட்சியை காண்பதற்கான கட்டணம் ரூ.25 முதல் ரூ.50 வரை உயர்த்தப்பட்டுள்ளது

Semmozhi Poonga

சென்னை: சென்னையில் நான்காவது முறையாக வேளாண் உழவர் நலத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள, செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சியை இன்று தமிழக முதல்வர் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைத்தார். இந்தக் மலர் கண்காட்சி இன்று முதல் தொடங்கி ஜனவரி 11 வரை, 10 நாட்கள் நடைபெறுகிறது, காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மலர் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம்.

இந்தக் கண்காட்சிக்காகவே ஊட்டி, கோவை, கிருஷ்ணகிரி, ஓசூர், கொடைக்கானல், கன்னியாகுமரி, மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து தனித்துவமான மலர்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, இங்கு தோட்டக்கலைத்துறை சார்பில் சுமார் 30 லட்சம் மலர்கள் பயன்படுத்தப்பட்டு, 20 விதமான வடிவங்களில் மலர் சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, யானை, படகு, மயில், கார், பொம்மைகள், வண்ணத்துப்பூச்சி, மலை ரயில், ஆமை, அன்னப் பறவை, நடனமங்கை என மலர்களால் செய்யப்பட்டுள்ள. இந்த மலர் கண்காட்சியை காண பெரியவர்களுக்கு ரூ. 200, சிறாருக்கு ரூ.100ஆக நுழைவுக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ.25 முதல் ரூ.50 வரை நுழைவுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் 2022ல் முதல்முறையாகக் கலைவாணர் அரங்கில் மலர் கண்காட்சி நடைபெற்றது.3வது முறையாகப் 2024ம் ஆண்டின் பிப்ரவரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் வகையில், நடைபெற்ற மலர் கண்காட்சியை 1 லட்சத்து 9 ஆயிரத்து 27 பேர் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்