தமிழகத்தில் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு; இன்று முதல் அமல்.!
தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் இன்று(ஏப்ரல்-1) முதல் சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள டோல் களில் வசூலிக்கப்பட்டு வரும் சுங்க கட்டணம், ஆண்டுக்கு ஒருமுறை விலை மாற்றம் செய்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிப்பு வெளியிடுவது வழக்கம். அதேபோல் இன்று ஏப்ரல்-1 முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
இதன்படி தமிழகத்தின் 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இது இன்று அதிகாலை 12 மணியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. ரூ.5 முதல் ரூ.55 அவரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
பழைய கட்டணத்திலிருந்து 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் தனியார் பேருந்துகளின் பயணம் செய்யும் கட்டணமும் உயர்த்தப்படலாம் என்பதால் இதற்கு பல்வேறு தரப்பிலும் இருந்து எதிர்ப்புகள் கிளம்பிவருகிறது.