எரிபொருள் விலை உயர்த்தும் போக்கை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் தேவையானது குறைய தொடங்கியது. இதையடுத்து, கச்சா எண்ணெய் விலையானது கடந்த சில மாதங்களாக சரிவைக் கண்டு வந்தது. ஆனால், தற்போது இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் தேவையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக எரிபொருள் விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 5 நாள்களில் மட்டுமே பெட்ரோல், டீசல் விலையானது தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு லிட்டருக்கு ரூ.3 வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ஊரடங்கு தொடக்கத்தில் ரூ.72.28 இருந்த பெட்ரோல் இன்று ரூ.77.96-க்கும் ரூ.65.71 இருந்த டீசல் ரூ.70.64 க்கும் விற்படுகிறது.
ஏழை,எளிய மற்றும் நடுத்தர மக்களை கடுமையாகப் பாதித்து விலைவாசி, பேருந்துக் கட்டண உயர்வுக்கும் வழி வகுக்கும் எரிபொருள் விலை உயர்த்தும் போக்கை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என ட்வீட் செய்துள்ளார்.
சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…