‘ஆட்டம் காணும் ஸ்டாலின்’ “அச்சத்தில் திமுக” தேர்தல் நடக்க கூடாது…!!

Published by
Dinasuvadu desk

சங்கரன்கோயில் இடைத்தேர்தலில் கருணாநிதி, அழகிரி என அனைவரும் இருந்தபோதே, தி.மு.க டெபாசிட்டை இழந்தது.

Image result for சங்கரன்கோயில் இடைத்தேர்தலில்

முக ஸ்டாலினின் புதிய தலைமை அண்ணா அறிவாலயத்தில் தீவிர விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது வருகின்ற இடை தேர்தல்கள்.திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல் திமுக_ வை எடைபோடும் தேர்தலாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் முக.ஸ்டாலின் இடைத்தேர்தல்களை விருப்பம் மாநிலம் முழுமைக்கான பொது தேர்தலை எதிர்கொள்ள விரும்புகிறார். அதற்க்கு முனக உள்ளாட்சித் தேர்தலை முதலில் எதிர்கொள்ளும் முடிவில் இருப்பதாக தி.மு.க வட்டாரங்கள் சொல்லுகின்றனர்.

முக.ஸ்டாலின் தி.மு.க தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, அரசியல்ரீதியான ஒவ்வோர் அசைவுகளையும் நிதானமாகவே கையாண்டு வருகிறார்.`கட்சித் தலைமைக்கு எதிராக அழகிரி பேசும் வார்த்தைகளுக்குக் கட்சி நிர்வாகிகள் எந்தப் பதிலையும் கூறக் கூடாது’ எனக் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளார் முக.ஸ்டாலின்.  `கருணாநிதி இருந்தபோதே கட்சிப் பதவிக்கு ஆசைப்படாதவன் நான். என்னைக் கட்சியில் சேர்த்துக்கொண்டால் போதும்’ என இறங்கி வந்தபோதும், ஸ்டாலின் மனம் மாறவில்லை. இதையடுத்து ஸ்டாலின் மீது கடுப்பாகிய அழகிரி தரப்பினர் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைதேர்தலைப் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

இந்த இரண்டு இடைத்தேர்தல்களையும் முக.அழகிரி தரப்பினர் முக.ஸ்டாலின் தலைமையைக் கேள்விக்குள்ளாக்குவதற்குக் கிடைத்த வாய்ப்பாக பயன்படுத்த உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.சொந்த சமுதாய வாக்குகள் அதிகம் இருப்பதால், ஆர்.கே.நகரைப் போல வெற்றி பெற முடியும் என அமமுக துணை பொது செயலாளர் TTV தினகரனும் கனவு கண்டு கொண்டு இருக்கிறாராம்.ஒரு பக்கம் ஆளும் அதிமுக வெற்றி பெற அனைத்து சித்து வேலைகளையும் செய்யும்.ஒரு வேலை ஆர்.கே.நகரைப்போல இங்கும் தோல்வி அடைந்தோம் என்றால் நம்முடைய அரசியல் கேள்விக்குறியாகி விடுமோ என்று நினைத்து முக.ஸ்டாலின் பொறுமையாக கையாண்டு வருவதாக திமுக வட்டாரம் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் முக.அழகிரி போட்டியிடுவார் என்கிறார்கள். இதே தொகுதியில் போட்டியிட குடும்ப உறுப்பினர்கள் சிலரும் முயற்சி செய்கின்றனர். இதைக் கவனிக்கும் பொதுமக்களுக்கு, நமது குடும்பத்தைப் பற்றிய எதிர்மறையான எண்ணங்களே ஏற்படும். அழகிரியை எதிர்கொள்ள குடும்பத்தினரைக் களம் இறக்குவது சரியானதல்ல என்பதுதான் கட்சி சீனியர்களின் கருத்தாக இருக்கிறது. எனவே, இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்லையும் நாடாளுமன்றத் தேர்தலோடு நடத்தப்படுவதற்கான சூழல்களை உருவாக்குவோம் என்ற மனநிலையில் தலைமை உள்ளது.

எனவே பொதுத்தேர்தல் வந்தால் போட்டியிடுவது தான் தி.மு.க தலைமையின் மனநிலையாக இருக்கிறது. தினகரனைப் பற்றி திமுக_வின் சீனியர்கள் சிலர் பேசும்போதும், `இரண்டு தொகுதிகளிலும் அவருக்குச் சமுதாயரீதியாக ஓரளவுக்கு வாக்குகள் கிடைக்கும். பொதுத்தேர்தல் வந்தால் மொத்தமாக 4 அல்லது 5 சதவிகித வாக்குகள்தான் தினகரனுக்குக் கிடைக்கும். ஆனால், இடைத்தேர்தல் அப்படியல்ல. ஆர்.கே.நகரைப் போலவே, திருப்பரங்குன்றத்திலும் வாக்குகள் வாங்கிவிட்டால், அவரது ஆட்டம் அதிகமாகிவிடும். இதற்கெல்லாம் நாம் இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்றால், பொதுத்தேர்தலை சந்திப்பதே நல்லது. இடைத்தேர்தலில் மீண்டும் ஒரு தோல்வியைச் சந்திப்பது கட்சிக்கு நல்லதல்ல’ எனக் கூறியுள்ளனர்.இப்படி அடுத்தடுத்த அரசியல் சூழல்களை எப்படி வீழ்த்துவது என்ற யுகத்தில் திமுக புதிய தலைவர் முக.ஸ்டாலின் உள்ளதாக தெரிகிறது.

DINASUVADU 

 

Recent Posts

பாக்சிங் டே டெஸ்ட் : ஆஸ்திரேலியா அணி பேட்டிங்., அறிமுக போட்டியில் அசத்திய இளம் வீரர்!

மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…

2 minutes ago

பாலியல் வன்கொடுமை வழக்கு : கைதான ஞானசேகரனுக்கு மாவு கட்டு., நீதிமன்ற காவல்!

சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…

30 minutes ago

சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

11 hours ago

தமிழகத்தில் வியாழன் கிழமை (26/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…

12 hours ago

வந்தாச்சு விடாமுயற்சி அப்டேட்! முதல் பாடல் இந்த தேதியில் தான் வெளியீடு!

சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…

12 hours ago

நான் தான் நம்பர் 1! டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…

12 hours ago