கடுமையான அடக்குமுறை.. கோயில் பூசாரிகளிடம் அச்சம் – ஆளுநர் ஆர்என் ரவி
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா இன்று பிரமாண்டமாக நடைபெற உள்ளது. சரியாய் இன்று பகல் 12.20 – 12.30 பிரதமர் நரேந்தர மோடி தலைமையில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்காக ராமர் பக்தர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி லட்சக்கணக்கான மக்கள், விஐபிக்கள் என ஏராளமானோர் அயோத்தியில் குவிந்துள்ளனர்.
இந்த சூழல், ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெற உள்ள சமயத்தில் தமிழகத்தில் உள்ள கோயிகளில் சிறப்பு பூஜை, அர்ச்சனை, அன்னதானம் உள்ளிட்டவைகள் செய்யப்படுவதற்கு தடை விதித்துள்ளதாகவும், தமிழக அரசு அடக்குமுறையை கையாண்டு வருவதாகவும் பாஜகவினர் குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்தாலும், இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்து மக்களை ஏய்க்கும் தேர்தல் பிரசார அரசியல் விழா – திருமாவளவன் கண்டனம்.!
இந்த நிலையில், கோயிலில் அடக்குமுறை இருப்பதாக தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இன்று காலை சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது. பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது.
நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது. பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது என தெரிவித்திருந்தார். இதையடுத்து, தங்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை ஆளுநர் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து, கோதண்டராமர் கோயில் அர்ச்சகர்கள் விளக்கமளித்தனர். ஆளுநர் வரும் நேரத்தில் ஒரு செய்தியாளர் பேட்டி கேட்டதாகவும், அதனை கருத்தில் கொண்டே ஆளுநர் அவ்வாறு கூறியிருக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.