ஒரு அறிகுறியும் இல்லாமல் மரணம்..கொரோனா உயிரிழப்பின் அச்சம்.!
எந்தவித நோய் அறிகுறியும் இல்லாமல் மரணம் எச்சரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், பிளாஸ்மா சிகிச்சையை பரிந்துரை செய்தது.
தமிழகத்தில், நேற்று ஒரே நாளில் புதிதாக 1,927 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 36, 841 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.மேலும், நேற்று மட்டும் 19 பேர் உயிரிழப்பு, மொத்த எண்ணிக்கை 326 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிந்தவர்களில் நிறைய நபருக்கு நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் ஒரு சிலர் மட்டும் கொரோனா தோற்று இருந்தாலும் எந்தவித அறிகுறியும் இல்லாமல் உயிரிந்துள்ளார்கள். இதனால் கடந்த சில நாட்களாக கொரோனா தோற்று இருந்தும் எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாம்.